வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

புதிய ஐடி சட்டம் குறித்து ஐநாவிடம் விளக்கம் அளித்த இந்தியா!

புதிய ஐடி சட்டம் எளிய மக்கள் அதிகார பகிர்வு என இந்தியா ஐநாவிடம் விளக்கம் தெரிவித்துள்ளது 
 
புதிய ஐடி சட்டம் சாதாரண மக்களுக்கு அதிகாரப்பகிர்வு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கு இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கான இந்திய ஐடி சட்டம் என்றும் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்தச் சட்டம் வகுக்கபபட்டுள்ளதாகவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது
 
சமூக வலைதளங்களை நெறிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் புதிய ஐடி சட்டம் உள்ளது என ஐநாவிடம் இந்த விளக்கம் அளித்துள்ளது என்பதும், புதிய ஐடி சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் நெகட்டிவான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஐநாவிடம் இந்த விளக்கத்தை இந்திய அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது