திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (21:06 IST)

ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளர்: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி பதவி காலம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து சமீபத்தில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்