செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (08:41 IST)

Dear Virat!! ராகுலை தொடர்ந்து கோலிக்கு பெருகும் ஆதரவு!

ராகுலின் இந்த பதிவை தொடர்ந்து Dear Virat என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 
இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது. இந்நிலையில் சிலர் கேப்டன் கோலியை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கோலியின் மகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை மிரட்டும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ட்வீட் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
அன்புள்ள விராட், 
அவர்களிடம் யாரும் அன்பு காட்டாததால் அவர்கள் அனைவரும் வெறுப்புணர்வு நிறைந்தவர்களாக உள்ளனர். அதனால் அவர்களை மன்னியுங்கள். அணியை பாதுகாக்கவும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
ராகுலின் இந்த பதிவை தொடர்ந்து Dear Virat என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதன் கீழ் இணையவாசிகள் விராட் கோலி மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.