ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:42 IST)

நியூஸிலாந்துக்கு எதிரான டி20; புதிய கேப்டனாக கே.எல்.ராகுல்??

இந்த மாத இறுதியில் நியூஸிலாந்தில் நடைபெற உள்ள டி20 போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா தொடர்ந்து தோல்விகளை கண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கேப்டனாக உள்ள விராட் கோலி உலகக்கோப்பை டி20க்கு பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் நியூஸிலாந்து – இந்தியா இடையே நடைபெற உள்ள டி20 தொடருக்கு யார் கேப்டனாக பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்த தொடருக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக இருப்பார் என பேசிக் கொள்ளப்படுகிறது.