புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (16:36 IST)

ஐபிஎல் ஏலத்தில் யுவ்ராஜ் பெயர் இருக்குமா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வை அறிவித்த நிலையில் இப்போது மீண்டும் களத்துக்கு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். உலகக்கோப்பை டி20 போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்து இவர் நிகழ்த்திய சாதனை இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் “நமது தலைவிதியை கடவுள்தான் தீர்மானிக்கிறார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நான் மீண்டும் பிட்ச்சிற்கு திரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் விரைவில் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் யுவ்ராஜ் பெயர் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓய்வுக்கு முன் சில ஆண்டுகளாகவே யுவ்ராஜ் சிங் சரியான பார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.