குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள்: டெல்லி வீரர் சாதனை!

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள்: டெல்லி வீரர் சாதனை!
siva| Last Updated: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (08:16 IST)
குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள்: டெல்லி வீரர் சாதனை!
ஐபிஎல் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணி வீரர் சாதனை செய்துள்ளார்

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக டூபிளஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்திய ரபடா, ஐபிஎல் தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை செய்துள்ளார். இவர் 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டை வீழ்த்திய ரபடாவுக்கு டெல்லி அணியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

முன்னதாக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 32 போட்டிகளிலும், மும்பை அணியின் மலிங்கா 33 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :