திங்கள், 19 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜனவரி 2026 (08:25 IST)

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டிகளை பாதுகாப்பு காரணங்களை கூறி இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக நிராகரித்துள்ளது.
 
 இந்தியாவில் வங்கதேச வீரர்களின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தற்போதுள்ள சூழலில், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும். 
 
பாதுகாப்பு கவலைகளை முன்னிறுத்தி வங்கதேசம் பிடிவாதம் பிடித்தால், அது இரு நாட்டு கிரிக்கெட் உறவுகளையும் பாதிக்கக்கூடும். ஐசிசியின் இந்த அதிரடி முடிவை தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva