திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (08:01 IST)

29 வயதிலேயே ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்கா முன்னணி வீரர்

29 வயதிலேயே ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்கா முன்னணி வீரர்
இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் 35 வயதுக்கு மேல் விளையாடி வரும் நிலையில் 29 வயதிலேயே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டி காக் தனது ஓய்வை அறிவித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஓய்வு முடிவை அறிவித்துள்ள குயின்டன் டி காக்கிற்கு 29 வயது என்பது குறிப்பிடத்தக்கது நீண்டகாலமாக யோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாகவும் எனக்கு எனது குடும்பம் மற்றும் குழந்தைகள் முக்கியம் என்றும் இனி வரும் நாட்களில் குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் ஓய்வு முடிவை அறிவித்த குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.