1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (15:18 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட்டை இழந்துள்ளது. 
 
கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன்களும் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 197 ரன்கள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி சற்று முன் 3 விக்கெட்டையும் இழந்தது
 
மயங்க் அகர்வால், தாக்கூர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அவுட் ஆகி உள்ளனர் தற்போது களத்தில் விராத் கோஹ்லி மற்றும் புஜாரா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த டெஸ்ட் போட்டி நாளை உடன் முடிவடைய உள்ள நிலையில் இந்திய அணி தற்போது 196 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது