செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (17:36 IST)

செஞ்சுரியன் டெஸ்ட்: அதிரடி வெற்றி பெற்றது இந்தியா

செஞ்சுரியன் டெஸ்ட்: அதிரடி வெற்றி பெற்றது இந்தியா
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று உள்ளது இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327  ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 174  ரன்களும் எடுத்தனர் இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது ஆனால் அந்த அணி 191 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அடுத்து 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் மிக அபாரமாக சிராஜ், ஷமி, பும்ரா, அஸ்வின் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கேஎல் ராகுல் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.