திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (18:13 IST)

நினைவேந்தல் நிகழ்ச்சி ; மெரினாவில் குவிந்த மக்கள் - சென்னையில் பதட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பேரணியாக செல்லும் விவகாரம் 

 
இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில இயக்கங்கள் திட்டமிட்டன. ஆனால், மெரினாவில் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி இதை நடத்தியே தீருவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. 
 
எனவே, மெரினா, சேப்பாக்கம் பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், காவல்துறை அனுமதியை மீறி மெரினாவை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியில் செல்கின்றனர்.  இதில் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை மெரினாவை நோக்கி செல்லாமல் தடுக்கும்  முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
 
பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை நினைவேந்தல் பேரணி சென்று கொண்டிருக்கிறது. பேரணி முடியும் நிலையில் போலீசார் அவர்களை போலீசார் கைது செய்வார்கள் எனத் தெரிகிறது.