வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (17:07 IST)

வரலாறு காணாத அளவு உயர்ந்த பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்கிற நிலையில், நாள்தோறும் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  
 
கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு 20 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அங்கு தற்போது தேர்தல் முடிந்து நிலையில், மீண்டும் தேர்தல் உயர்த்தப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மீண்டும் 35 காசு உயர்த்தப்பட்டு ரூ.79.13 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலை 28 காசு உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.71.32 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரலாறு காணாத இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.