புரோகபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி
புரோகபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்த நிலையில் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தமிழக கபடி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் பாட்னா அணிக்கு எதிராக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 24-35 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது.
இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 தோல்விகளையும் இரண்டு டிராக்களையும் ஒரே ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.