1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:44 IST)

புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் விநியோகம்

நாசிக், மைசூரில் அச்சிடப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. 30 பெட்டிகளில் கொண்டு வரப்பபட்ட புதிய 500 ரூபாய் நோட்டு சரக்குப் பெட்டக லாரிகள் மூலம் ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது.  



அதனைத் தொடர்ந்து, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பபட்டுள்ளன. இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள்  விநியோகம் செய்யப்படுவதால், பணத்தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.