1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (10:29 IST)

பூனை என நினைத்து சிறுத்தையை வளர்த்து, என்ன நடந்தது தெரியுமா??

விசாகபட்டினத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் ஒருவன் பூனைக்குட்டிகள் என்று நினைத்து சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ளான்.


 
 
அந்த சிறுவன் தன் வீட்டுக்கு அருகில் இருந்த புதரில் இரண்டு சிறுத்தை குட்டிகளை பூனை என நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளான். 
 
பின்னர் இரண்டு குட்டிகளுக்கும் பால் மற்றும் உணவளித்து பார்த்துக்கொண்டுள்ளான். சிறுவனின் பெற்றோர்களால் கூட அவை சிறுத்தை குட்டிகள் என்பதை கண்டறிய முடியவில்லை.
 
பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அவை பூனை குட்டிகள் அல்ல, சிறுத்தை குட்டிகள் என்று சொன்ன பிறகு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
சிறுவனின் வீட்டிற்கு வந்த வனத்துறையினர் இரண்டு சிறுத்தைகளையும் எடுத்துச்சென்று காட்டில் விட்டனர்.