1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (08:37 IST)

புரோ கபடி: பெங்கால் த்ரில் வெற்றி

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டியின் நேற்றைய போட்டியில் பெங்கால் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதியது.



 
 
ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் முன்னிலை பெற்று வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இறுதி நிமிடத்தில் பெங்கால் ஒரே ஒரு புள்ளி அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அந்த அணி 32 புள்ளிகளையும் உபி அணி 31 புள்ளிகளையும் பெற்றது.