புரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்

Last Modified திங்கள், 14 அக்டோபர் 2019 (08:15 IST)
கடந்த 12 வாரங்களாக புரோ கபடி போட்டிகளின் லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பிளே ஆஃப் மற்றும் அரையிறுதிப் போட்டிகள் தொடங்க உள்ளன

ஒவ்வொரு அணியும் லீக் போட்டிகளில் 22 போட்டிகளில் விளையாடிய நிலையில் தற்போது புள்ளிகள் அடிப்படையில் 6 அணிகள் பிளே ஆஃப் மற்றும் அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற உள்ளன. டெல்லி மற்றும் பெங்கால் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மூன்றாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று முதல் எலிமினேட்டர் போட்டியில் விளையாட உள்ளது. அதேபோல் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்த மும்பை மற்றும் அரியானா அணிகள் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ளது

முதல் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, டெல்லி அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும் என்பதும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி பெங்களூரு அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இரண்டு அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த ஆண்டின் புரோ கபடி தொடரின் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :