வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (12:33 IST)

புரோ கபடி லீக்: மே30ல் வீரர்கள் ஏலம் தொடக்கம்

இந்தியாவில் நடைபெறும் புரோ கபடி லீக்கின் 6வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் மே 30, 31ல் மும்பையில் நடக்கவுள்ளது.

 
 
புரோ கபடி லீக் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
 
இந்த அணிக்களுக்கான வீரர்களின் ஏலம் வரும் மே 30, 31ம் தேதி நடைபெறுகிறது. இதில் கென்யா, வாங்காளதேசம், கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 58 வெளிநாட்டி வீரர்கள் ஏலம் விட படுகின்றனர்.
 
இந்த சீசனில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதில் தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த அஜய் தாக்குர், சி.அருண், அமித் ஹுடா ஆகிய பேரும் அடங்குவர்.