ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (06:59 IST)

உபி மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில்விபத்து: 2 பேர் பலி 15 பேர் காயம்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பண்டா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வாஸ்கோடாகாமா- பாட்னா விரைவு ரயில் திடீரென தடம் புரண்டதால்  அந்த ரயிலில் இருந்த 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  2 பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.





விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4.18 மணிக்கு இந்த விபத்து நடந்ததாகவும், விபத்து நடந்தபோது பெரும்பாலான பயணிகள் தூங்கி கொண்டிருந்ததால் காயம் அடைந்தோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.