புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (15:07 IST)

இரண்டரை மணி நேரத்தில் 300 வழக்குகளுக்கு தீர்ப்பு!!

பாட்னாவில் நீதிபதி ஒருவர் இரண்டரை மணி நேரத்தில் 300 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன். ராஜேந்திர மேனன் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அதிலிருந்து இன்று வரை விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார்.
 
பாட்னாவில் தேங்கி கிடக்கும் வழக்குகளை முடித்துவைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனால், 7 மாதத்தில் பதிவான 63,070 வழக்குகளில் 62,061 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. 
 
இந்நிலையில் இவரது அதலைமையில் இரண்டரை மணி நேரத்தில் 300 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி வியப்பை ஏற்படுத்தியுள்ளார் நிதிபதி ரவிராஜன்.
 
தனி நீதிபதியாக ரவிராஜன் விசாரித்த 300 ஜாமீன் வழக்குகளில் 289 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகளில் வழக்கறிஞர்கள் வராததால் தீர்ப்பளிக்க முடியாமல் போனது.