1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (15:42 IST)

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: சென்னை - பெங்களூர் அணி இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை எப்.சி. அணி பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.
16 அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் முதல் போட்டியாக நேற்று கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதியது. இதில் 2-0 என்ற கோல்கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இன்று இரவு 7.30க்கு நடக்கவிருக்கும்  2–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை எப்.சி. அணி பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.