வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:13 IST)

பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றா தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இன்று தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கில் பதக்கம் வெற நிலையில் இம்முறை இரண்டாவது முறையாகப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் மாரியப்பன். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி மாரியப்பப்பனை பாராட்டியுள்ளார். அதில் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ள ,மாரியப்பனின் சாதனையால் தேசம் பெருமிதம் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.