1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (17:02 IST)

பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற வுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் ஆரம்பித்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் உச்சம் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோட் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளும், ஊரடங்கு நீட்டிப்பது குறித்த தகவல் வெளியாகலாம எனத் தெரிகிறது.