திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (20:27 IST)

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி; இந்தியாவுக்கு முதல் பதக்கம் !

சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற்று முடிந்த நிலையில், தற்போட்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பவினா பென் படேல் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

நடைபெற்று முடிந்த காலிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனையை 11-5, 11-6,11-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பவினா பென். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்க இந்த பாராலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.