உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நார்வே செஸ் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினர். இந்த போட்டியில் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். கிளாசிகள் போட்டியில் முதல்முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று நடந்த முதல் சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா ஆகிய இருவரும் 'கிளாசிக்கல்' முறையில் மோதினர். இந்த போட்டியின் 44வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதை அடுத்து கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் 'ஆர்மேஜ்டன்' முறையில் பிரக்ஞானந்தா, கார்சலனுடன் மோதினார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Edited by Siva