1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (20:14 IST)

FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அண்ணாமலை பாராட்டு

vishali
பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை  வைஷாலிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை செல்வி. வைஷாலி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட் செஸ் தொடரில், விளையாடத் தகுதி பெற்றுள்ள உலகின் முதல் சகோதர சகோதரி இணை என்ற பெருமையும் படைத்துள்ள வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவரும், உலக அரங்கில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம் நாட்டையும், நம் அனைவரையும் பெருமைப்படுத்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.