செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran

கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பவல்!

powel
கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பவல்!
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் உறுதியான வெற்றி என்ற நம்பிக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணிக்கு டெல்லி அணியின் பவல், மரண பயத்தை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடைசி ஓவரில் 6 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர் அடித்தார் பவல். இதனால் ராஜஸ்தான் அணி அதிர்ச்சி அடைந்தது
 
மீதமுள்ள 3 பந்துகளில் 3 சிக்ஸர் அடித்தால் டில்லி அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் நான்காவது பந்தில் ரன் ஏதும் இல்லை என்பதும் 5வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே பவல் அடித்தார் என்பதும் 6-வது விக்கெட்டை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் ராஜஸ்தான் அணிக்கு மரண பயத்தை பவல் காட்டியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது