செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:12 IST)

டெல்லியில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1009 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு மீண்டும் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 
 
டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 4 சக்கர வாகனங்களில் மாஸ்க் இல்லாமல் பயணிப்போருக்கு அபராதம் பொருந்தாது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
 
இதேபோல் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாஸ்க் அணிவது அவசியம் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்ற உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.