செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (21:24 IST)

ஒரே சீசனில் மூன்றாவது சதம்… டெல்லி கேப்பிடல்ஸை அடித்து நொறுக்கிய பட்லர்!

இன்று நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் அணிகள் இனிவரும் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்துவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளயாடி 222 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 116 ரன்கள் சேர்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஒரே சீசனில் விராட் கோலி 4 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.