ரசிகர்கள் இல்லாவிட்டாலும் விளையாடனும் - பிரபல கிரிக்கெட் வீரர்
சீனாவில் இருந்து பல உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா வைரஸால் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல தொழில்கள்,விளையாட்டுகள் முடங்கியுள்ளது.
இந்நிலையில் 2020 வருடம் முழுவதும் கொரோனாவுடன் வாழ வேண்டும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என வல்லுநர்க்கள் தெரிவித்துள்ளனர்.
.
இந்நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கிரிக்கெட் அமைப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சில வீரர் ஓகே சொல்லியுள்ளனர். சிலர் அது விறுவிறுப்பு இருக்காது எனச் சொல்லியுள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதாவது :
ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிடில் வீரர்கள் விளையாட வேண்டும்;நிறைய வீரர்களுக்கு விளையாட்டுதான் முக்கியம்., அப்படி இருக்கையில் ஏன் விளையாட மாட்டார்கள் ? ரசிகர்கள் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? ரசிகர்கள் மைதானத்தில் இல்லாவிட்டாலும் தொலைகாட்டி ஆன்லைன் நேரடி ஒளிபரப்பில் அதிகம் பேர் கண்டு ரசிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.