திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 மே 2020 (20:38 IST)

சச்சினை விட ’இவர்தான்’ சிறந்த தொடக்க வீரர்… சைமன் டவ்ல்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  சச்சினை விட ரோஹித் சர்மாதான்  சிறந்த ஒருநாள் தொடக்க வீரர் என  நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சைமன் ட்வ்ல் கூறியுள்ளதாவது :

சச்சின் டெண்டுல்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் இரட்டைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டினார். ஆனால்,ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

எனவே, சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மாதான் சிறந்த ஒரு நாள்  கிடிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர் என சைமன் ட்வ்ல் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து கருத்துக்கு சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.