வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (18:43 IST)

தோனிக்கு கங்குலி அமைந்தது போல எனக்கு அமையவில்லை – அமித் மிஸ்ரா வேதனை!

இந்திய அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த அமித் மிஸ்ரா தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து வேதனையாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் முன்னணி இடத்தை நகர்ந்துகொண்டிருந்த அமித் மிஸ்ரா ஒரு கட்டத்தில் தனக்கான வாய்ப்பை இழந்தார். கடைசியா 2017 ஆம் ஆண்டு அவர் இந்திய அணிக்காக விளையாடியதுதான் கடைசி. அதன் பின்னர் ஐபிஎல் மற்றும் ராஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘இந்திய அணியில் ஒரு வீரர் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினால் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற விதியுள்ளது. ஆனால் அது போன்ற அழைப்புகள் தேர்வர்களிடம் இருந்து எனக்கு ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை. இந்தியாவுக்காக கடைசியாக டி 20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தோனிக்கு கங்குலியிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்தது போல எனக்கும் கிடைத்திருந்தால் 70 டெஸ்ட் போட்டிகள் வரை நான் விளையாடி இருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.