1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Player arrested for hitting referee on the head

பிரபல விளையாட்டு வீரர் கைது ! போலீஸார் அதிரடி

வில்லியம் ரிபிரோ
பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது நடுவரை தலையால் முட்டிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே என்ற பகுதியில் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில், சாபாலே என்ற அணியுடன்  குவாரணி என்ற அணியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ரோட்ரிகோ கிரிவெல்லரே என்பவர் நடுவராக இருந்தார். அப்போது, வில்லியம் ரிபிரோவுக்கு அவர் ஃபீ கிக் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில்,கோபம் அடைந்த வில்லியம் ரிபிரோ நடுவரை தலையால் முட்டினார். இதில் நடுவர் கிழே சரிந்தார். உடனே அருகே இருந்த சக வீரர்கள் நடுவரை ஈட்டு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். இதையடுத்து, வில்லியம் ரிபிரோ என்பவர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே: டூபிளஸ்சிஸ் அபார பேட்டிங்