புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (17:06 IST)

பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நிறுத்தம்: என்ன காரணம்?

பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நிறுத்தம்
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கால்பந்து போட்டி கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் 
 
பிரேசிலுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற  இருந்தது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர்கள் 4 பேர் கொரோனா தடுப்பு விதிகளை மீறி விளையாடியதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகார் காரணமாக போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையீட்டால் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஆட்டம் ரத்தானது. இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த ஆட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது