1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (15:08 IST)

டாஸ் வென்றது பாகிஸ்தான்.. ஆனால் அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா..!

இன்று  ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 60 ரன்களும், மிட்செல் மார்ஷல்  42 ரன்களும், எடுத்துள்ளனர் என்பதும் இருவரும் அபாரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலியா பொறுத்தவரை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran