ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (22:15 IST)

உலகக் கோப்பை 2023: புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்தில் இந்திய அணி

Pakistan- india match
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் இத்தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  இன்று எதிர்கொண்டது.

இப்போட்டியில்  வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், 2023 உலகக் கோப்பை தொடர் புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திலேயே இந்திய அணி நீடிக்கிறது.

அதே புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி   நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகள் மட்டும்தான் இதுவரை எந்தப் போட்டியிலும் தோற்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.