திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (09:04 IST)

இன்று பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா… பெங்களூருவில் பலப்பரீட்சை!

உலக கோப்பை தொடருக்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளது பாகிஸ்தான் அணி. இதுவரை விளையாடிய போட்டிகளில் இந்தியாவிடம் மட்டும் தோற்றுள்ளது. அடுத்து வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது.

இன்று மதியம் பெங்களூருவில் நடக்க உள்ள இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்புப் பிரகாசமாகும் என்பதால் கடுமையாக வெற்றிக்கு போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பெங்களூருவில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. பின்னர் காய்ச்சல் வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் குணமாகிவிட்டதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.