1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (17:11 IST)

95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: சொந்த மண்ணில் தொடரை வென்றது!

95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இன்றுடன் முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது.
 
பாகிஸ்தானில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த முதல் இன்னிங்சில் 272 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 201 ரன்களுக்கு அவுட் ஆனது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் 298 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 571 ரன்கள் என்ற இலக்கு வழங்கப்பட்டது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 274 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதால் 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய போட்டியில் ஹசன் அலி ஆட்ட நாயகனாகவும் முஹம்மது ரிஸ்வான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது