1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (14:26 IST)

IND-ENG Test: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து சாதனை !

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம்செலுத்தி வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்

முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியுள்ளது.
 

 
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்கார ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுக்க, அஸ்வின் பந்தில் ரோரி பர்ன்ஸ் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த டேனியல் லாரன்ஸை பூம்ரா ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் இந்தியாவின் ஆதிக்கம் வந்தது போல இருந்தது.

ஆனால் அதன் பின்னர் வந்த ஜோ ரூட்டும் தொடக்க ஆட்டக்காரர் சிப்ளியும் விக்கெட்களை இழக்காமல் ஆடினர், சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். சிப்ளே முதல் நாளின் கடைசி பந்தில் 87 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் ஆடிவருகிறது. இதுவரை இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய மண்ணில் இவ்வளவு சிறப்பாக ஆடி ரன் சேர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும் அவர்களின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரன முதஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் இரட்டை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.