1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:09 IST)

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சென்றுள்ள தென்னாப்பிரிக்கா இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 220 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  அதையடுத்து ஆடிய பாகிஸ்தான், 378 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 158 ரன்கள் பின் தங்கிய தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸிலும் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறியது. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் 88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து 90 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பவாத் ஆலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.