1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (17:03 IST)

இந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட் வாரம்: 3 டெஸ்ட் போட்டிகள் ஆரம்பம்!

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பிரபலம் அடைந்த பிறகு கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட்டனர்
 
ஆனால் பிசிசிஐ மற்றும் ஐசிசி எடுத்த முயற்சிகளின் காரணமாக தற்போது டெஸ்ட் போட்டிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் 3 நாட்களில் 3 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. நாளை பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நாளை மறுநாள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. 3 நாட்களில் 3 டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளதால் இந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட் வாரம் என்று கூறப்படுகிறது