1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:24 IST)

இந்தியாவை கண்டிப்பாக பாகிஸ்தான் வெல்லும்… அடித்து சொல்லும் பாக் முன்னாள் வீரர்!

வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்வது சம்மந்தமாக இழுபறியான சூழல் நிலவியது.

ஆனால் இப்போது பாகிஸ்தான் அணி கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரிலேயே  அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டிதான் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிதான் கண்டிப்பாக வெல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் உறுதியாகக் கூறியுள்ளார். இதுவரை பாகிஸ்தான் அணி , இந்தியாவை உலகக் கோப்பை போட்டிகளில் ஒரே ஒருமுறைதான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.