1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2023 (20:18 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை மாற்றம்.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது?

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன் வந்த நிலையில் இந்த அட்டவணையில் சில போட்டிகள் மற்றும் மாற்றப்பட்டு புதிய அட்டவணை வெளியாகியுள்ளது. 
 
குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது அந்த போட்டி அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  
 
அதேபோல் இங்கிலாந்து வங்கதேசம் போட்டி, பாகிஸ்தான் இலங்கை போட்டி, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போட்டி, நியூசிலாந்து வங்கதேச போட்டி, இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் போட்டி, ஆஸ்திரேலியா வங்கதேச போட்டி, இங்கிலாந்து பாகிஸ்தான் போட்டி ஆகியவையும் தேதி மாற்றப்பட்டுள்ளது. 
 
 மேலும் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva