வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (14:56 IST)

உலகின் உயர்ந்த கட்டிடத்தில் ஒளிர்ந்த சூப்பர் ஸ்டார் முகம்!

RAGUL GANDHI
கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் ரிலீஸாகாத நிலையிலும், அவரது மகன் ஆர்யன் கான் கைதான விவகாரத்திலும் பெரிதும் வருத்தத்தில் இருந்த ஷாருக்கான் அதிலிருந்து மீண்டு, பதான், அட்லியின் ஜவான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்   நேற்று தன் 57 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகில் மிக உயர்ந்த கட்டிடடமான புர்ஜ் கபீஃபாவில் நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளையயொட்டி, அவரை கவுரவபடுத்தும் விதமாகவும் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், அவரது முகம் இன்று அக்கட்டிடத்தில்  ஒளிந்து வருகிறது.

உலகின் முக்கிய நிகழ்வுகள், முக்கிய சாதனைகள்,நாடுகளில் சுதந்திர தினவிழாவையொட்டி, இந்த  புஜ் கலீஃபாவில் வண்ணவிளக்குகளால் கொண்டு குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றி விளம்பரம் செய்யப்படும்.

ஏற்கனவே, கமலின் விக்ரம் பட புரோமொ புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited By Sinoj