1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (15:51 IST)

கே ஜி எஃப் முதல் பாக வசூலை முந்திய காந்தாரா… நிற்காமல் பொழியும் வசூல் மழை!

காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வசூல் மழை பொழிந்து வருகிறது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் ஜெய்பீம் திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், KGF 2 திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான காந்தாரா திரைப்படம் 45 கோடி ரூபாய் வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தியில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் 45 கோடி வசூலித்தது அப்போது சாதனையாக பார்க்கப்பட்டது. இப்போது அந்த சாதனையை காந்தாரா கடந்துள்ளது.