அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு: இந்தியாவிலும் உயர வாய்ப்பு!
அமெரிக்க பெடரல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள பெடரல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டுக்கு பின் அதிகபட்சமாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் இதுதான் என்று கூறப்படுகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பொருளாதாரத்தில் தேவையை குறைக்க உதவுகிறது என்றும் அதன் மூலம் பணவீக்க விகிதம் குறையும் என்றும் பெடரல் வங்கி தலைவர் கூறியுள்ளார்
இந்த நிலையில் அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தும் போதெல்லாம் இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran