ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (18:29 IST)

ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவருக்கே கொரோனா பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்

ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவருக்கே கொரோனா
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அந்த போட்டியை ஓரிரு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கலாமா? என்று ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கோசோ தஷிமாவ் என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. தற்போது அவருடைய ரத்த மாதிரிகள் சோதனை முடிவு வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் கமிட்டியின் உள்ள உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் பங்கேற்ற கூட்டங்களில் அவருடன் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்பதால் அவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியை நடத்தலாமா என்று ஆலோசனை செய்தவருக்கே கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது