1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (16:40 IST)

கொரோனாவை விரட்ட பாரசிட்டமல்... ஜெகன் மோகன் ரெட்டி அட்ராசிட்டி!!

கொரோனோ வைரஸ் பாதிப்பை சரி செய்ய பாரசிட்டமல் போதுமானது என அலட்டாமல் தெரிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
 
இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனோ வைரஸ் பாதிப்பை  சரிசெய்ய பாரசிட்டமல் மாத்திரைகள் போதுமானது என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா குறித்து பேசியதாவது, கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே யாரும் அஞ்சி நடுங்கத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனோ பாதிப்பு ஏற்படும். கொரோனோ வைரஸ் பாதிப்பை சரி செய்ய பாரசிட்டமல் போதுமானது என அலட்டாமல் தெரிவித்துள்ளார். 
 
ஆந்திராவில் நடக்க வேண்டியிருந்த உள்ளாட்சி தேர்தல் கொரோனோ வைரஸ் தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.