சென்னை தி-நகரில் கடைகளை மூட உத்தரவு ! மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னைதி-நகரில் கடைகளை மூட உத்தரவு ! மாநகராட்சி ஆணையர் தகவல்
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பிரபல மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான தி நகர் எனப்படும் தியாகராய நகரில் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளதாக வும் சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.