1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (18:00 IST)

தாண்டவமாடும் கொரோனா: இந்திய எண்ணிக்கை 137!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர். 
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.